Home » » New Zoological Park Is Coming Soon in Pallikaranai Lake by 2016

New Zoological Park Is Coming Soon in Pallikaranai Lake by 2016

Written By WeAreIndians on Saturday, 4 January 2014 | 20:33


சென்னையின் புறநகர் பகுதியான பள்ளிக்கரணையில் உயிரியல் பூங்கா ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு நல்ல காலம் பிறந்துள்ளது. குப்பை கொட்டும் இடமாக இருந்ததை சுத்தப்படுத்தி, அடுத்த மூன்று ஆண்டுகளில் பறவைகள், தாவரங்கள், விலங்குகள் அடங்கிய மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமைக்கப்படும். அது 2016ஆம் ஆண்டு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1960களில் 6000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த வன பகுதி, தொடர்ந்து ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளால் 2012இல் வெறும் 593 ஹெக்டேர்களாகச் சுருங்கிவிட்டது. Eco Earth என்ற ஒரு தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அரசு தயாரித்துள்ள அந்த காலி நிலத்தின் தெற்கு பகுதியையும் சேர்த்து 1000 ஹெக்டேர்களாகக் கையகப்படுத்தி, அந்த இடத்தை ஒரு சுற்றுலா தலமாக மாற்ற முடிவு செய்துள்ளது.

2016 ஆம் ஆண்டு உயிரியல் பூங்காவுடன் ஒரு திறந்தவெளி அரங்கு, ஒரு ஓய்விடம், ஒரு நடைபாதை, ஒரு பார்வையிடும் இடம் ஆகியவையும் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மாநகராட்சியின் இரண்டு முக்கிய குப்பை கொட்டும் மூடுமாறு மாநகராட்சிக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment