Home » » How to Reduce Weight Using Swiss Ball | உடல் எடை குறைய எளிய ஸ்விஸ் பந்து பயிற்சி

How to Reduce Weight Using Swiss Ball | உடல் எடை குறைய எளிய ஸ்விஸ் பந்து பயிற்சி

Written By WeAreIndians on Monday, 27 January 2014 | 09:49

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இந்த பயிற்சியை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். இந்த பயிற்சி உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செய்யும் பயிற்சியாகும்.

பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்து கால்களுக்கு இடையே ஸ்விஸ் பந்தை வைத்து கால்கள் அதன் மேல் இருக்கும் படி வைத்துக் கொள்ளவும். கைகள் தரையில் இருக்க வேண்டும். இது தான் முதல் நிலை.

பின்னர் தலை மட்டும் தரையில் இருக்கும்படி கால்களை ஸ்விஸ் பந்தின் மேல் ஊன்றிய நிலையில் உடலை மேல் நோக்கி படத்தில் உள்ளபடி தூக்க வேண்டும். இந்த நிலையில் கைகள் தரையில் இருக்க வேண்டும். மேலும் உடலை வளைக்க கூடாது. உடல் நேர் கோட்டில் இருப்பதை போல் நேராக இருக்க வேண்டும். இது இரண்டாம் நிலை.

பின்னர் மூன்றாவது நிலையில் கால்களை பந்தின் மேல் ஊன்றியபடி உடலை மேல் நோக்கி 90 டிகிரி இருக்கும்படி உயர்த்த வேண்டும். இந்த மூன்று நிலைகளிலும் சில நிமிடங்கள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வர வேண்டும்.

மூன்று நிலைகளும் சேர்ந்தது தான் ஒரு செட். இவ்வாறு 10 முதல் 15 செட் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் செய்வது சற்று கடினமாக இருக்கும். நன்கு பழகிய பின்னர் செய்வது எளிமையானது.

0 comments:

Post a Comment