சன்னா மசாலா (chenna masala recipe)
தேவையான பொருட்கள்:
- சுண்டல் / கொண்டக்கடலை / சன்னா – 1 கப்
- வெங்காயம் -1
- தக்காளி -2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் -1
- சிவப்பு மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் -1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
- உப்பு
அரைக்க தேவையான பொருட்கள்:
- தேங்காய் -1/4 கப்
- பெருஞ்சீரகம் -1/2 தேக்கரண்டி
தாளிக்க:
- சீரகம் – 1 தேக்கரண்டி
- எண்ணெய் 1 tblsp
மேலே தூவ :
- வெங்காயம் (பொடியாக நறுக்கியது )
- கொத்தமல்லி இலை (பொடியாக நறுக்கியது )
- எலுமிச்சை சாறு
செய்முறை:
- கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு முழுவதும் ஊற வைத்து குக்கரில் 3-4 விசில் விட்டு எடுத்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதனுடன் இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .
- வதக்கியதும் அத்துடன் தக்காளி,உப்பு சேர்த்து வதக்கி மசாலா பவுடர் ,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.குறைந்த தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.
- அதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும்.குழம்பு கெட்டியாக வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும் .
- பரிமாறும் பொழுது பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி எலுமிச்சை வைத்து ரொட்டி ,பூரி ,சப்பாத்தி ,நாண் உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
0 comments:
Post a Comment