குழந்தைகளுக்கு வலிமையான தசைகள் வேண்டுமானால் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
கர்ப்பத்திற்குப் பிந்தைய காலத்தில் உள்ள 678 தாய்மார்களிடம் மேற்கொள்ள ஆராய்ச்சியின் முடிவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு நான்கு வயது ஆகும் போதுதான் அவர்களுக்கு நரம்புகள், எலும்புகள் ஆகியவை இறுகுகின்றன. கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிடும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு மற்றும் எலும்புகளில் பிடிமானம் இறுகுகின்றன. மேலும் பிற்காலத்தில் குழந்தைகள் பெரியவர்களாகும் போது சக்கரை நோய், எலும்பு முறிவுகள் ஆகிய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.
இந்த ஆராய்ச்சியை இங்கிலாந்தில் உள்ள சௌதம்டன் பல்கலைக்கழகம் மேற்கொண்டது. இங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், உலகளவில் மதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment