தேவையான பொருட்கள்;வேக வைத்த முழு பாசிப்பயறு – ஒரு கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு – மீடியம் சைஸ் – 1
இஞ்சி,பூண்டு பொடியாக நறுக்கியது தலா ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் நறுக்கியது – 1
மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் – தலா கால் டீஸ்பூன்
தக்காளி – நறுக்கியது 1
சர்க்கரை – 2 பின்ச்
உப்பு – தேவைக்கு.
தாளிக்க :எண்ணெய் – 1-2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கருவேப்பிலை – 1 இணுக்கு.
சீரகம் – அரை டீஸ்பூன்
கருவேப்பிலை – 1 இணுக்கு.
செய்முறை விளக்கம்:
பாசிப்பயறை குறைந்தது நான்கு மணி நேரம் ஊற வைத்து, வேகவைத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.வேகவைத்த உருளைக்கிழங்கு நறுக்கி வைக்கவும்.இஞ்சி பூண்டு,பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம்,கருவேப்பிலை தாளிக்கவும்.நறுக்கிய,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
உடன் தக்காளி உப்பு.சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி வதங்கிய பின்பு வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.வேகவைத்த பச்சைப்பயறு சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விடவும்.
ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு சேர வேகட்டும்.
கெட்டியானவுடன் அடுப்பை அணைக்கவும்.
சுவையான பச்சைப்பயறு உருளைக்கிழங்கு கறி ரெடி.
உங்களுக்கு ஸ்டூ மாதிரி வேண்டுமென்றால் தேவைக்கு தேங்காய்ப்பால் சேர்த்து நுரை வரவும் அடுப்பை அணைக்கவும்.இது குறிப்பாக ஆப்பம்,தோசைக்கு சூப்பராக இருக்கும்.
0 comments:
Post a Comment