Home » , , , , , , » Cook Cake in 5 Minutes | 5 மினிட்ஸ் கேக் செய்யும் முறை

Cook Cake in 5 Minutes | 5 மினிட்ஸ் கேக் செய்யும் முறை

Written By WeAreIndians on Monday, 20 January 2014 | 09:27


தேவையான பொருட்கள்
சீனி – ஒரு கப்
பால் – ஒரு கப்
மைதா – ஒன்றரை கப்
கொக்கோ பவுடர் – முக்கால் கப்
பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி
வெனிலா எக்ஸ்ட்ராக்ட் – ஒரு தேக்கரண்டி
ஆயில் – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
தேவையானவற்றை தயாராக வைக்கவும். அரிசிக்கு உபயோகிக்கும் கப்பை அளவாக எடுத்துள்ளேன்.
ரூம் டெம்ப்பரேச்சரிலிருக்கும் பாலில் சீனியைப் போட்டு நன்றாக கரைக்கவும்.
சல்லடை அல்லது வடிகட்டியில் மைதா, கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடரை சலித்து பாலில் சேர்க்கவும்.
நன்றாக கலந்துவிட்டு வெனிலா எக்ஸ்ட்ராக்ட், ஆயில் சேர்த்து கலக்கவும்.
பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும். (எலுமிச்சை சாறு, பேக்கிங் பவுடருடன் சேர்ந்து நல்ல சாஃப்ட்னஸ் கிடைக்கும்).
இந்த கலவையை மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஊற்றவும்.
பின் மைக்ரோவேவில் வைத்து ஹையில் 5 நிமிடங்கள் வேக விடவும். அவரவர் மைக்ரோவேவிற்கு தகுந்தாற்போல் பார்த்துக் கொள்ளவும்.
மேலே சரியாக வேகவில்லையெனில் மீண்டும் ஒரு நிமிடம் வேக வைக்கவும்.
சுவையான, சூப்பர் ஸ்பாஞ்சி கேக் தயார். மேலே சாக்லெட் ஊற்றி அலங்கரித்து பரிமாறலாம். சாக்லெட் ஊற்றாமல் அப்படியே கூட சாப்பிடலாம்

0 comments:

Post a Comment