தேவையான பொருட்கள்
- சிக்கன் அரை கிலோ
- இஞ்சி, பூண்டு விழுது மூன்று தேக்கரண்டி,
- காய்ந்த மிளகாய் – 5
- சோம்பு – 5 கிராம்
- பச்சை மிளகாய் – 2
- சின்ன வெங்காயம் – 150 கிராம்
- தக்காளி – 100 கிராம்
- கறிவேப்பிலை தேவையான அளவு
- கடலை மாவு – ½ கப்
- தேங்காய் கால் மூடி
- எண்ணெய் 100 மில்லி கிராம்
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் சிக்கனை மஞ்சள் தூள் போட்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
- அதன்பின் மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவைத்து மைபோல அரைக்கவும். அந்த விழுதை கழுவி வைத்த சிக்கனுடன் கலந்து பிசிறி வைக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் ஒரு மேசைக் கரண்டி தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் பிசிறி விடவேண்டும். இந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- தனியாக ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், மிளகுதூள், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு அரிசி மாவு, ஆப்பசோடா சேர்த்தால் சற்று மொறுப்பாக ஆகும். கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை, கடலை மாவில் தேய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
- மற்றொரு கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து லேசாக வதக்கவும். இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும். சூடான செட்டிநாடு வறுத்த கோழி ரெடி. இது சைட்டிஸ் ஆக தொட்டுக்கொள்ள ஏற்றது.
0 comments:
Post a Comment