எப்போதும் துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு கொண்டு சமைத்து அலுத்துவிட்டதா? அப்படியானால் சிந்தி ஸ்டைல் ரெசிபியான பருப்பு ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்.
இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், துவரம் பருப்பிற்கு பதிலாக கடலைப் பருப்பை பயன்படுத்துவது மற்றும் மசாலா பொருட்களை சேர்க்கும் விதம் தான்.
இது ஒரு எளிமையான ரெசிபி மட்டுமின்றி, வித்தியாசமான சுவை கொண்ட ரெசிபியும் கூட. மேலும் பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த சிந்தி தால் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 3 (நீளமாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
முதலில் கடலைப் பருப்பை நீரில் நன்கு கழுவி, பின் அதனை குக்கரில் போட்டு அடுப்பில் வைத்து, தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் விசிலானது போனதும் குக்கரை திறந்து, பருப்பை கடைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 1/2 டீஸ்பூன் சீரகம் மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அதனை குக்கரில் உள்ள பருப்பில் போட்டு கிளறி, மாங்காய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு வைக்க வேண்டும். அடுத்து அதே வாணலியை அடுப்பில், மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், எஞ்சிய சீரகம், கறிவேப்பிலை, பாதி வெங்காயம் சேர்த்து 3-4 நிமிடம் தாளித்து, பின் பருப்பில் சேர்த்து கிளறி விட வேண்டும்.
இப்போது சுவையான சிந்தி தால் ரெசிபி ரெடி!!! இதன் மேல் மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு அலங்கரித்து, சாதத்துடன் பரிமாறலாம்.
how to prepare sindhi dhal,how to cook sindhi dhal,sindhi dhal samaipathu yeppadi,sindhi dhal recipe cooking,indian recipe cooking
0 comments:
Post a Comment