Home » , , , , » வெஜிடபிள் சப்பாத்தி செய்வது எப்படி

வெஜிடபிள் சப்பாத்தி செய்வது எப்படி

Written By Moni on Sunday, 19 January 2014 | 23:30


தேவையான பொருட்கள் மற்றும் அதன் அளவுகள் :

சப்பாத்திக்கு தேவையானவை:

கோதுமை மாவு – 2 கப்
நெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி

ஸ்டப் செய்ய தேவையானவை:

காய்கறிகள்(பட்டாணி, பீன்ஸ், கேரட்) விருப்பத்திற்கேற்ப – 1 கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – 1/2 கப்
இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
புதினா, மல்லித்தழை அரைத்தது – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு – 1 மேசைக்கரண்டி

செய்முறை:

1.காய்கறிகளை அளவான தண்ணீரில் உப்பு சேர்த்து, வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
2.கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதுகள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
3.அதனுடன், மசித்த உருளைக்கிழங்கு, மசித்த காய்கறி கலவை, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
4.கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்துப் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்..
பிசைந்த மாவிலிருந்து, மெல்லிய சப்பாத்திகள் திரட்டி,இரு சப்பாத்திகளுக்கு நடுவே காய்கறி கலவையைப் பரப்பி, ஓரங்களை ஒட்டிக் கொள்ளவும்.
5.சப்பாத்திக் கல்லை சூடு செய்து, ஸ்டப் செய்த சப்பாத்தியைப் போட்டு நெய் அல்லது எண்ணெய் சுற்றிலும் போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்.

vegetable chappathi cooking in tamil, how to prepare vegetable chappathi in tamil,how to cook  vegetable chappathi in tamil,how to prepare stuffed  vegetable chappathi ,how to cook stuffed  vegetable chappathi , vegetable chappathi seivathu eppadi 


"உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்" 

0 comments:

Post a Comment